புதிய தலைமுறை சேனலை அரசு முடக்கியதாக பரவும் தகவல் தவறு.நடந்தது என்ன?
புதிய தலைமுறை சேனலை அரசு முடக்கியதாக பரவும் தகவல் தவறு.
நடந்தது என்ன?
நியாயத்தின் பக்கம் என்றுமே தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிற்கும்.
சிந்தியுங்கள்.
இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் உண்மைச் செய்திகளை திரித்து பரபரப்புக்காக பொய்ச் செய்திகளையே ஒளி ஒலி பரப்புகிறது.
ஒரு அரசு அமைந்த 18 நாட்களுக்குள் பல கோடி கனிம உளழல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்றுக் கூட திருச்செந்தூர் கோவில் காவலர்கள், தீட்சிதர்கள் லஞ்சம் வாங்கியதாக அந்த 4 பேரையும் அறநிலையத் துறை அமைச்சகம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த உண்மைகளை திரித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களில் புதிய தலைமுறையும் ஒன்று. பரபரப்புக்காக முந்திக் கொண்டு அவதூறு செய்திகளை வெளியிடும் எந்த ஒரு ஊடகங்களையும் தயவு தாட்சயமின்றி முடக்குவதை அரசு தயக்கம் காட்ட வேண்டாம்.
பத்திரிகை, ஊடகங்கங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடு தேவை. அது தமிழகத்துக்கு உடனே தேவை. உண்மையில் தவறு செய்யும் ஊடகங்கள், பத்திரிகைகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்க கூடாது. பத்திரிகை, ஊடக தர்மம் காப்பாற்றப்பட வேண்டும்.
- மு.சிவதமிழவன், மாநிலத் தலைவர் .
- தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன், தலைமையகம் .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக