அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்துக்கு வர பாஜக முயற்சிக்கிறது -எம்.ஏ.பேபி!!

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி நூல் வெளியீட்டு விழாவீல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர். எம்.ஏ.பேபி கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர். ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொணடனர். தொடர்ந்து சிபிஎம் அகில இந்திய பொது செயலாளர். பேபி பேசுகையில் , 

மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது.

அதிமுக மூலம் பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்துக்கு வர பாஜக முயற்சிக்கிறது.

குதிரை பேர நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். கவர்னரின் கால தாமதம் காரணமாகவே இது நடக்கிறது. டிடிவி தினகரன் புகார் தொடர்பாக எனக்கு தெரியாது. தவெக அளித்த கடிதம் குறித்து ஆராய வேண்டியது ஆளுநரின் வேலை அல்ல. தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது மட்டுமே ஆளுநர் செய்ய வேண்டியது

விஜய் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ளார். அவர் மதச்சார்பின்மை அரசை அமைப்பதாக தான் எங்களிடம் தெரிவித்துள்ளார். டெல்லி இங்கு ஆட்சியை பிடிக்க முயல்வது தவறு. நாங்கள் Tvk விஜயை நம்புகிறோம்.

திமுக - அதிமுக ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி.

ஆனால், அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது உண்மை.

அவர்கள் பாஜக கூட்டணியில் உள்ளார்கள். அதனால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

எங்களுக்கும் திமுகவுக்கும் எந்த சிக்கலுமில்லை. கூட்டணி சுமூகமாக தொடர்கிறது என்று பேசினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!