சாதனம் தர்மம் என்பது வாழ்க்கை முறை-நடிகர். அர்ஜுன்!!
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்?சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் முழங்கினார். இந்நிலையில் தான்,''சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். அடுததவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் சனாதன தர்மத்தில் ஒன்றாக உள்ளது. வயதான காலத்தில் அப்பா - அம்மாவை கடவுள்போல் பார்த்து கொள்ள வேண்டும் என சனாதன தர்மம் சொல்கிறது. சனாதன தர்மம் இருக்க கூடாது என்றால் அப்பா -அம்மாவை வெளியே துரத்திவிட வேண்டும். முடியுமா?'' என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.அப்போது நடிகர் அர்ஜுனிடம் சனாதன தர்மம் பற்றி பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக பத்திரிகையாளர், ''சனாதனம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார்? இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தாலும் கூட உங்களுக்கு சம்பந்தமான கேள்வி தான் இது. நீங்கள் ஆக்ஷனிலும் கிங், ஆன்மிகத்திலும் கிங். நீங்கள் கோவில் எல்லாம் கட்டி உள்ளீர்கள்'' என கேள்வி எழுப்ப . அதற்கு அர்ஜுன், ''எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்ல வேண்டும் என்றால் சனாதனம் என்பது வாழ்க்கை முறை. எப்படி நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும். தப்பு செய்யக்கூடாது. திருடக்கூடாது. அடுத்தவர்களின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் சனாதன தர்மத்தில் ஒன்று. என்றார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக