பண்ருட்டி அடுத்த குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் 2006 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 20 வருடங்கள் கடந்து சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சிவானந்தம், சுப்ரமணியன் தலைமை தாங்கினர்.
2006 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வரவேற்றனர்.
ஆசிரியர்கள் குமாரி, திருப்பதி, வெங்கடாசலபதி, சரவணன், தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள் ஆறுமுகம், கலைமணி, வின்செண்ட் சிகாமணி, தமிழ் செல்வி,மீரா பாய், சசிகலா,சசி ரேகா வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, ஒவ்வொருவரும் தங்களது குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு உள்ளிட்டவை குறித்தும், பள்ளியில் படிக்கும் போது நடந்த சுவாரசியமான கடந்தகால அனுபவங்கள் குறித்தும், மலரும் நினைவுகளாக பரிமாறிக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்களை முன்னாள் மாணவர்கள் கௌரவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினர்.
பள்ளிக்கு அன்பளிப்பும், மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக