ஓட்டு எண்ணிக்கை குறித்து!!...
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சராசரியாக 14 ஓட்டு எண்ணும் மேஜைகள் (Counting Tables) அமைக்கப்பட்டிருக்கும். பெரிய தொகுதிகளுக்கு அதிக மேஜைகள். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனி மேஜைகள் உண்டு.
ஒவ்வொரு மேஜைக்கு தேர்தல் கமிஷன் சார்பில் Counting assistant, Counting supervisor, Micro-observer நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதே போல் ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளர் சார்பில் ஒரு Counting agent இருக்கலாம்.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணுவது தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 2000 தபால் வாக்குகள் இருக்கலாம். 2021 தேர்தலில் குறைந்தபட்சமாக 344 தபால் வாக்குகளும் (சென்னை துறைமுகம் தொகுதி), அதிகபட்சமாக 4872 தபால் வாக்குகளும் (நாமக்கல் தொகுதி) இருந்தன.
8:30க்கு EVM வாக்குகளை எண்ணத் தொடங்குவார்கள்.
எத்தனை ரவுண்ட் (round) எண்ணிக்கை என்பது சட்டமன்ற தொகுதிக்கேற்ப மாறுபடும்.
தேர்தல் நடந்த அன்று ஒவ்வொரு பூத்திலும் உள்ள EVMல் எத்தனை ஓட்டுகள் பதிவாகின என்பதை பூத் அலுவலர் கையெழுத்து போட்ட Form 17C (Part 1) பூத் ஏஜென்ட்களிடம் தந்திருப்பார். அதில் EVMன் IDயும் இருக்கும். ஓட்டு எண்ணிக்கையின் போது இந்த Form17C (Part 1)ல் குறிப்பிட்டுள்ள ஓட்டுகளும் எண்ணப்படும் ஓட்டுகளும் ஒன்றாக இருக்கிறதா எனCounting agent சரிபார்த்துக்கொள்ளலாம். இதில் மாறுபாடு இருந்தால் எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டு அந்த எண்ணும் மையத்தின் Returning Officer தலையீட்டின் கீழ் தீர்வு காணப்படும்.
ஒவ்வொரு Counting Tableலும் ஒரு ரவுண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் EVMகள் வைப்பார்கள். ஒவ்வொரு EVMமும் அங்குள்ள Counting Agentகள் முன்னிலையில் திறக்கப்படும். அதிலுள்ள Result பட்டன் அழுத்தியதும், மொத்த ஓட்டுகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் விழுந்த ஓட்டுகள் எண்ணிக்கை தெரியும். அந்த எண்களை Form 17C (Part 2)ல் அந்த மேஜையின் Counting assistant பதிவிடுவார். இது எல்லா மேஜைகளிலும் நடக்கும்.
ஒவ்வொரு ரவுண்டு முடியும்போதும் அப்போதைய எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.
இறுதியில் ஒவ்வொரு மேஜையின் Form 17C (Part 2)ல் அந்தந்த மேஜையின் Counting ஏஜென்ட்கள் ஒப்புதல் தந்தவுடன், மொத்தமாக தொகுக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கையும் சேர்க்கப்படும். Returning Officer (RO) கையெழுத்துடன் அந்த தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
[குறிப்பு: முடிவை அறிவிக்கும் முன்பு VVPAT எனப்படும் Voter verifiable paper audit trail சரிபார்த்தல் சில EVMகளுக்கு Random Sampling ஆக செய்யப்படும்]
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக