நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

🔹 தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி. கடலோர மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை.

🔹 கொளுத்தும் வெயிலுக்கு இடையே குளிர்வித்த கோடை மழை. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.

🔹 நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு. டெல்லியில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்ப அலை வீசியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

🔹 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு. மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம். 

🔹 விசிக எம்.எல்.ஏ வன்னியரசு, ஐ.யு.எம்.எல். எம்.எல்.ஏ. ஷாஜகான், இன்று அமைச்சர்களாக பதவியேற்பு. நிகழ்ச்சி குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

🔹 முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு. அமைச்சர் செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, புதிதாக பொறுப்பேற்ற மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு.

🔹 காங்கிரஸை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறை ஒதுக்கீடு. கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான ராஜேஷ்குமாருக்கு சுற்றுலாத்துறை.

🔹 தவெக அமைச்சரவையில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு. கமலி, விஜயலட்சுமி உள்ளிட்ட 4 பெண் அமைச்சர்களும் பதவியேற்பு.

🔹 தவெக அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. சென்னை, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 20 பேருக்கு பிரதிநிதித்துவம்.

🔹 பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம். ஒன்றிய அரசின் அறிவிப்பால் மாற்ற முடியவில்லை என்று விஜய் கூறியதாக பெ.சண்முகம் பேட்டி

🔹 ராமநாதபுரத்தில் 28 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது. பணத்தை பெறும் போது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கினார்.

🔹 ஏற்காட்டில் 49-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடக்கம். நாய் கண்காட்சி, படகு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு.

🔹 புவிசார் குறியீடு பெற்ற அரசம்பட்டி தென்னங்கன்றுகள் பெயரில் போலி கன்றுகள் விற்பனை என புகார். போலி உற்பத்தியாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தோரிக்கை.

🔹 கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் தாமதமாக புறப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் சிரமம். ரயிலை உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என கோரிக்கை.

🔹 தனுஷ்கோடி - இலங்கை இடையே 16 மணி நேரம் துடுப்பு படகில் பயணம். கடல் வள பாதுகாப்பது, பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.

🔹 கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் குவியும் பக்தர்கள். இலவச தரிசனத்துக்காக 30 மணி நேரம் காத்திருப்பு.

🔹 சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுமதிப்பீட்டிலும் தொடரும் குளறுபடி. விடைத்தாள் மதிப்பீடு குறித்து மாணவர்கள் சந்தேகம்.

🔹 தேசிய தேர்வு முகமை தலைவர் அபிஷேக் சிங் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜர். நீட் வினாத்தாள் கசியவில்லை, சில வினாக்கள் மட்டுமே வெளியானது என்று கூறியதால் சர்ச்சை.

🔹 ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சுமார் நான்கரை மண நேரம் ஆலோசனை. கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை மனதில் வைத்து பணியாற்றி அறிவுரை.

🔹 மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா தொகுதியில் அமைதியாக நடந்து முடிந்த மறுவாக்குப்பதிவு. 86 சதவீதத்தும் மேல் பதிவாகி இருக்கக்கூடும் என தேர்தல் ஆணையம் தகவல்.

🔹 இளைஞர்களின் கோபத்தை பிரதிபலிக்கும் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 18 மில்லியனாக அதிகரித்ததால் பாஜக அதிர்ச்சி.

🔹 மும்பை பாந்த்ரா பகுதியில் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம். அவகாசம் அளிக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார்.

🔹 ஏர் இந்தியா விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கம். விமானத்தில் தீப்பிடித்ததாக காட்டப்பட்ட எச்சரிக்கையை அடுத்து நடவடிக்கை.

🔹 புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கொல்லப்பட்டதாக தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!