தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!!
தமிழக முதல்வரான பிறகு சி. ஜோசப் விஜய் இன்று(மே 27) முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், 2 நாள் பயணமாக இன்று தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.அங்கு பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 4 மணியளவில் சந்திக்க உள்ளார்.குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிலுவையில் உள்ள நிதி விடுவிப்பு, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் நேரில் சென்று கோரிக்கை வைக்கவுள்ளார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக