முதல்வன் படம் அல்ல ஆட்சி நிர்வாகம் என்பது..யூடியுபர் மாரி தாஸ்!!

தமிழகத்தில் மின்வெட்டு காரணம் முந்தையை திமுக ஆட்சி தான்! அப்படினு சொல்லி முடிக்க முயற்சிக்கிறார்கள் TVK கட்சியினர். 

 1)10 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான மின் வெட்டு வெறும் 1 வாரத்தில் உருவானது எப்படி? பல இடங்களில் 4,5 மணி நேரம் கரண்ட் இல்லை? 

அரசின் மின் உற்பத்தி திறன் - தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு : இந்த இரண்டில் எங்கே பிரச்சனை?

2)தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் மொத்த மின் உற்பத்தி திறன் என்ன? அதில் எந்த இடத்தில் தற்போது பாதுப்பு? 

 3)வெயில் காலத்தில் கூடுதல் மின் தேவையை எப்படி முந்தைய அரசுகள் கையாண்டன ஏன் உங்களால் செய்ய முடியவில்லை?

 4)நிலக்கரி , காற்றாலை  , அனுமின் நிலையம் , இயற்கை எரிவாயு , சூரிய ஒளி , நீர் ஆற்றல் : இவற்றின் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியில் எதில் இப்போது உற்பத்தி குறைந்தது என்று இந்த அளவுக்கு கரண்ட் கட் செய்கிறீர்? 

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் நான் உங்கள் நிர்வாகம் எப்படி குழப்பத்தில் நிற்கிறது என தெளிவாக நான் பதில் விரைவில் வீடியோவாக வெளியிடுக்கிறேன். 

நிர்வாகத்திறமையின்மை தான் உங்கள் பிரச்சனையே - 

அதே அதிகாரிகள் , அதே டெண்டர் எடுத்த நிறுவனங்கள் அதே கட்டமைப்பு - இந்த சிஸ்டத்தில் தான் நம் புத்திசாலிதனமே உள்ளது. அதன் பெயர் தான் நிர்வாக திறமை.

என்னஎன்ன கேள்வியை அரசு அதிகாரிகளிடம் கேட்க வேண்டும் , அவர்கள் சொன்னாலும் நாம் எப்படி உண்மையை ஆய்வு செய்ய வேண்டும்! என்பது கூட அடிப்ப்டை புரிதல் கூட விஜய் க்கு இல்லை. 

கோட் போட்டா மாற்றம் இல்லை அடிக்கிற வெயிலுக்கு கோட் போடுவதே கோமாளிதனம்..

அதிகாரத்தை கையாழுவதும் நிர்வாகத்தை நடத்துவதும் தனி திறமை அவசியம்.. 

அது முதல்வன் படம் அல்ல... எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சூர்ப்ப மாற்றம் என பேசி பின்னடி மியூசிக் போடு திரிய. மாற்றம் என்பது திறமையானவர்களுக்கு வாய்ப்பு என்பது.. 

சும்மா தியட்டரில் பிளாக் டிக்கெட் வித்தவன் ,துப்பாக்கி படத்தை 10 முறை பார்த்தவன் எல்லாம் எளிய குடுமபம் என்று சொல்லி எங்கள் தலையில் கட்டாதீர்..

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!