திருமயம் அருகே வாணப்பட்டறையில் தீ விபத்து!முன்னாள் அமைச்சர். ரகுபதி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா பில்லமங்கலத்தைச்சேர்ந்தவர் கருப்பையா(52). இவர் அதே ஊரில் தனி இடத்தில் ஓட்டு கூடத்தில் வாணப்பட்டறை நடத்திவருகிறார்.அரசு லைசைன்ஸ் பெற்று தொழில் செய்து வந்தார்..விழா காலங்களில் பயன்படுத்தும் தோரண வெடி,வாண வெடி,  கலர்வெடி தயாரித்து விற்று வந்தார்.நேற்று திருவிழா ஆர்டருக்கு வெடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவருக்கு உதவியாக அதே ஊரைச்சேர்ந்த  பிரம்மன்(54) வேலை பார்த்தார். வெடி மருந்துகளை கூட்டி அள்ளிய போது மருந்து தீப்பற்றி  எரிந்தது.  உள்ளே  கட்டியிருந்த  வெடிகளும் ஒரே நேரத்தில் பயங்கர சத்த த்துடன்  வெடித்தது. இதில் கருப்பையா உடல் சிதறி  அதே இடத்தில் பலியானார். பிரம்மன் படுகாயத்துடன் திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.,பொன்னமராவதி டிஎஸ்பி சரவணன், முன்னாள் அமைச்சர் மற்றும்திருமயம் எம்எல்ஏ ரகுபதி தீயணைப்புத்துறை துணை இயக்குநர் முரளி,மாவட.ட தீயணைப்பு அலுவலர் சத்திய கீர்த்தி ,கியூ பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர. முன்னாள் அமைச்சர் ர குபதி இறந்துபோன கருப்பையாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தீயணைக்கும்படையினர்,தண்ணீரை பீய்ச.சி அடித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!