விழுப்புரத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டம்!!
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக தலைவர். சிவ.இளங்கோ இல்லத்தில் மாவட்ட தலைவர் சு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தொழிலாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இரா. பீம்ராஜ், மாவட்ட பொருளாளர் இரா. தணிகைவேலன், துணைத் தலைவர்கள் ஜனார்த்தனன், வெங்கட்ராமன், செஞ்சி வட்டக்கலை தலைவர் ஸ்ரீதர் இளைஞரணி செயலாளர் முரளி மற்றும் ராமலிங்கம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக