பெண்கள் தொழில் முனைவோரின் பிரமாண்ட அரங்க கண்காட்சி அரக்கோணத்தில் சிறப்பாக நடந்தது!!
ராணிப்பேட்டை மாவட்டம், 5 அரக்கோணத்தில் ஐந்திற்கு மேற்பட்ட ஆண்டு காலமாக இயங்கி வரும். ஸ்மாட் கேரியர் ப்ரோ மோஷன்ஸ் தீபம் அறக்கட் டளை மற்றும் டிடிசி தொழி லாளர் பேரவை இணைந்து டவுன்ஹால் மண்டபத்தில் எக்ஸ் போ -2026 கண்காட்சியை நடத்தினர் இதற்காக 32க்கும் மேற்பட்ட அரங்கங்கள் முழுமையான பெண் தொழில் முனைவோரால் அமைக்கபட்டதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான குடும்பத்தினர் பயனடைந்தனர் முக்கியமாக அனைவருக்கும் வேண்டிய முக்கிய ஆடை அலங் காரப் பொருட்கள் மெழுகு பொருட்கள், வாசனை திரவியங்கள், கைவண்ண பொருட்கள், குளிர்பானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன மேலும் சிறுவர்களுக்கான விளையா ட்டு பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சி களும் நடந்தேறியது இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர் ஒரு நாள் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்த ஒருங்கினைப்பார்கள் பி எஸ் ஜெய்குமார், மற்றும் கலைவாணி ஆகியோரால் பெண்கள் தொழில் முனை வோர் குழுவினர் முழு பயன் அடைந்தனர் இந்நிகழ்ச்சிக்கு முழு ஆதரவளித்த டவுன்ஹால் பொது செயலாளர் மருத்துவர் எஸ்பன்னீர்செல்வம் மற்றும் டவுன்ஹால் நிர்வாகிகள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக