வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம்!!


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும்  திட்டம்  தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  01.01.2021 முதல் 31.03.2021 வரையான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள பட்டப்படிப்பு, மேல்நிலைக் கல்வி, பட்டயப்படிப்பு. எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பள்ளி  இறுதித் தேர்வு  தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாகப் பள்ளியில் 9-வது வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் 10-வது பள்ளியிறுதி தேர்வில் கலந்து கொண்டு தோல்வியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்) ஆகிய தகுதிகளை பதிவு செய்துள்ள இளைஞர்கள் நடப்புக் காலாண்டிற்கு உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க ஏதுவாக அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களை  இராணிப்பேட்டை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் விண்ணப்பத்தினை www.tnvelaivaaippu.gov.in or https://tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை (Aadhaar Card), குடும்ப அடையாள அட்டை (Smart Card) மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் வேலை நாட்களில்  நேரில் அலுவலகம் வந்து சமர்ப்பிக்கலாம்.

தகுதிகள்:- தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 45 வயதிற்குள், இதரவகுப்பினர்  40 வயதிற்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரு.72,000/-க்கு மிகக்கூடாது. முழு நேர கல்வி பயிலும் மாணவராக இருத்தல் கூடாது.

உதவித்தொகை வழங்கப்படும் விவரங்கள்:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும்  திட்டம் வாயிலாக பத்தாம் வகுப்பு தோல்வி -ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி ரூ.300, மேல்நிலைக் கல்வித் தேர்ச்சி/பட்டயப்படிப்பு ரூ.400, பட்டப்படிப்பு/பட்ட மேற்படிப்பு ரூ.600 ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!