தேனி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர். அருண்- பிரின்சி தம்பதியினர் காவல்துறை வாகனம் மோதி விபத்தில் சிக்கினார்!!

தேனி மாவட்டம்,தேனி கானாவிளக்கு  மருத்துவமனைக்கு குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினர்  எஸ்பிஎஸ் காலனி அருகே  வந்த போது காவல்துறை வாகனம் மோதி விபத்தில் சிக்கினார்.

 விபத்து நடந்த உடனே காவல்துறையினர் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர் அரசு மருத்துவமனையில் அருண் சிகிச்சை பலனின்றி தற்பொழுது இறந்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கோட்டூர் கிராமத்தை சேர்ந்த அருண் உறவினர்கள் தேனி - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மனைவி கை குழந்தையுடன் ரோட்டில் அமர்ந்து கதறி அழுவது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

உறவினர்களுடன் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!