மக்கள் சக்தி – அரசியல் புரட்சி மதுரை கிழக்கில் த. வெ. க. கார்த்திகேயன வரலாற்று வெற்றி! மாபெரும் சாதனை!!

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை தேர்தல் முடிவு தமிழக அரசியல் அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் மூர்த்தி அவர்கள் தோல்வியடைந்த நிலையில், அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் களமிறங்கிய கார்த்திகேயன்  16,547 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புதிய அரசியல் வரலாற்றை படைத்துள்ளார்.

   இந்த வெற்றிக்குப் பின்னால் கார்த்திகேயன் அவர்களின் அயராத உழைப்பும், திட்டமிட்ட பிரச்சாரமும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே தொகுதி முழுவதும் தினந்தோறும் மக்கள் சந்திப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து, வீடு தோறும் சென்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். 

      எந்தப் பகுதியையும் தவறவிடாமல், ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து தனது திட்டங்கள் மற்றும் நோக்கங்களை எடுத்துரைத்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

      அவரது எளிமையான அணுகுமுறை, இடைவிடாத களப்பணி, இரவு பகலாக பாராது மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் ஆகியவை மக்களின் மனதில் ஆழமாக பதிந்தன. இதன் விளைவாக, அசைக்க முடியாத அரசியல் பலம் கொண்டிருந்த அமைச்சரையே மக்கள் ஜனநாயக வாக்கின் மூலம் தோற்கடித்து, மாற்றத்திற்கான தங்களது விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

     தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க உள்ள இந்த வரலாற்று தருணத்தில், மதுரை கிழக்கில் கார்த்திகேயன் பெற்றுள்ள இந்த வெற்றி கட்சியின் எழுச்சிக்கு வலுசேர்க்கும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

      இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; மக்களோடு இணைந்து உழைத்த ஒருவரின் அர்ப்பணிப்புக்கு மக்கள் வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!