ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் கல்வி உதவித்தொகை எஸ் பி வழங்கினார்!!

இராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் 12 நபர்களுக்கு சிறப்பு கல்வித் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (21.05.2026)  காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே. சிபின் இ.கா.ப . அவர்கள் வழங்கி  மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதேபோன்று சிறப்பாக கல்வியில் சாதித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி பாராட்டினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!