திருமலைக்கேணியில் நடைபெற்ற கார்த்திகை விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள திருமலைக்கேணியில் சுப்பிரமணிய சுவாமி கோ யிலில் வைகாசி மாத கார்த்திகை பூஜை விழா நடந்தது.இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து கோயிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது.இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக