அறந்தாங்கி அருகே மீமிசலில் தவணை முறையில் இருசக்கர வாகனம் எடுத்த நபர் தவணையை சரியாக கட்டாததால் பைக் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்தவர் பைக் விற்பனை செய்த ஷோரூமை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அடுத்துள்ள ஆர்.புதுபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி மரக்காயர்(30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மீமிசலில் உள்ள யமஹா ஷோரூம் ஒன்றில் புதிய பைக் ஒன்றை தவணை முறையில் பைனான்ஸ் கட்டும் வசதியில் வாங்கியுள்ளார்.

பைனான்ஸ் மூலம் வாங்கியவர் கடந்த சில மாதங்களாக தவணையை சரியாக கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தினர் முகமது அலி மரக்கடையார் வைத்திருந்த யமஹா பைக்கை பறிமுதல் செய்து கொண்டு சென்ற நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் பைக் விற்பனை செய்த ஷோரூமிற்கு வருகை தந்து இருந்த பைக்குகள் மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளார்.

இச்சம்பவம் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷோ ரூம் ஊழியர்கள் மீமிசல் காவல் துறைக்கு தகவல் கூறிய நிலையில் கோட்டைப்பட்டினம் காவல் கண்காணிப்பார் வெங்கடேஷ்விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அடித்து நொறுக்கிய நபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

 இளைஞர் ஒருவர் பைனான்ஸ் வசதி மூலம் பைக் எடுத்துவிட்டு தவணை கட்டாமல் பரிந்துரை செய்யப்பட்ட பைத்தியக்கார ஷோரூம் அடித்து நொறுக்கிய சம்பவம் மீமிசல் மற்றும் சுற்றுலா பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!