ஸ்ரீ வெங்களாமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு!!
தேனி அல்லிநகரம் நகராட்சி 8வது வார்டு எல்லையில் வெங்களா நகரில் அமைந்துள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த அருள்மிகு ஸ்ரீஆதி முனீஸ்வரர் திருக்கோயிலில் ஆன்மிக எழுச்சியுடன் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல ஆண்டுகளாக பக்தர்களின் நம்பிக்கைக் கோட்டையாக விளங்கி வரும் இத்திருத்தலத்தில், தேனி அல்லிநகரம் நகராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், பால்பண்ணை உரிமையாளரும், உழைப்பின் மூலம் உயர்ந்த சமூக அக்கறை கொண்டவருமான திரு குருமூர்த்தி அவர்கள், அருள்மிகு ஸ்ரீ வெங்களாமுனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் திரு கோவிந்தராஜ் ஜீ அவர்கள் தலைமையில் கலந்து கொண்டு, ஸ்ரீ வெங்களாமுனீஸ்வரர் சுவாமியின் அருளைப் பெற்று, திரு குருமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
ஆன்மிக பாரம்பரியத்தை பாதுகாத்து, கோவில் வழிபாடுகளின் மூலம் சமூக ஒற்றுமை வளர்ப்போம் என உறுதிகூறினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக