தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!ஆட்டோ மீது மோதிய ஆம்னி பஸ் – தலைநசுங்கி ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலி!!
கடலூர் மாவட்டம்,சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, வேப்பூர் அருகே தொண்டங்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆட்டோ மீது மோதியதில் பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அரியநாச்சி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (41), த/பெ நடேசன், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை தீவிரம்:
இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
“அதிவேகம்… ஒரு உயிரை பறித்தது!”
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக