பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!!

ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அதன்படி வருகிற மே 25, 26 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கு முந்தைய மே 23 -4ஆவது சனிக்கிழமை, மே 24 ஞாயிறு விடுமுறை நாள்களாகும். அதேபோல மே 27 பக்ரீத் பண்டிகை அன்று பெரும்பாலான மாநிலங்களில் அரசு விடுமுறை நாளாகும்

இதனால் எஸ்பிஐ வங்கி சேவைகள், தொடர்ந்து 5 நாள்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்பிஐ வங்கிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி வழங்க நாங்கள் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தேவைகளுக்கு ஏடிஎம்கள், யோனா எஸ்பிஐ செயலி, யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!