ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் குடிநீர் குழாய் பதிப்பு வேலை முடிந்து சரி செய்யாமல் இருக்கும் தார் சாலை !!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இடையில் குடிநீர் பைப் லயன் பதிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளம் தற்போது வரை சரி செய்யாமல் பைப்பும் புதைக்காமல் தோண்டிவிட்டு அப்படியே சென்று இருக்கின்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட அவ்விடத்தின் எதிரில் அரசினர் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அங்கு வரும் பொதுமக்கள் அனைவருமே சிரமப்படுகின்றனர் பள்ளி திறக்கும் தருணத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக சரி செய்ய வேண்டும் மற்றும் அப் பகுதியில் நடைபாதை இல்லை அதனால் அந்த இடத்தில் தான் நடந்து செல்ல வேண்டும் அந்த நடைபாதையில் பள்ளங்கள் தோன்றியிருப்பதால் பல சிரமங்கள் உண்டாவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் அதற்குள் பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் சார்பிலும் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் சார்பிலும் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு பாக்கியராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக