உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் மறைந்த சீனு. சின்னப்பா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி!!
புதுக்கோட்டை மாவட்டம், பேக்கரி மகாராஜா நிறுவனங்களின் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த தொழிலதிபர் மறைந்த சீனு. சின்னப்பா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி உழைப்பாளர்கள் தினமான இன்று புதுக்கோட்டை மாவட்டம் பெருகொண்டான் விடுதியில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் உள்ள நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்றது. அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அவரது சமாதியில் அவரது உருவப்படம் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் உணவுகள் பரிமாறப்பட்டன. நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பலவகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் மகன் அருண் மற்றும் குடும்பத்தினர், பணியாளர்கள் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக