திட்டக்குடியில் இரவு நேர ரகசிய எடை… பகல் நேரத்தில் விவசாயிக்கு ஏமாற்றமே!”பகலில் அரசு அலுவலகமா? இரவில் வசூல் மையமா?” – திட்டக்குடியில் பரபரப்பு!
திட்டக்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடுமையான முறைகேடுகள் நடைபெறுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகள் நடைபெற வேண்டிய நிலையில், திட்டக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் பகல் நேரங்களில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதற்கு பதிலாக தினமும் இரவு நேரங்களில் மட்டுமே நெல் எடுப்பு நடைபெறுவதாகவும், வியாபாரிகளிடமிருந்து ஒரு நெல் மூட்டைக்கு ₹100 வரை வசூலித்து உடனடி எடை போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
🌾 ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நாட்களாக தேங்கி கிடப்பதாகவும், அதே நேரத்தில் விவசாயிகளிடமிருந்து கூட கட்டாயமாக ஒரு மூட்டைக்கு ₹50 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
💬 “அரசு விதி ஒன்று... திட்டக்குடியில் நடப்பது வேறொன்றா?” என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக