எங்களிடம் கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் இபிஎஸ்!!
எங்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் எடப்பாடி பழனிசாமி; கூட்டணிக்கான காரணத்தை கூட சொல்லவில்லை.
தேமுதிகவுக்கு வாக்கு கொடுத்தப்படி எம்பி சீட் கொடுக்க சொன்னோம்; எங்களுடைய கருத்தை உதாசீனப்படுத்தி விட்டார்.
"ஒற்றை தலைமை வேண்டும் என நாங்கள்தான் முடிவு எடுத்தோம். அதற்கான தண்டனையை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.
சுயமாக அவர் ஒன்றும் பொதுச் செயலாளராகவில்லை. நாங்கள்தான் இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தோம்"
இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் தொடர் தோல்வியை சந்தித்து வரும் அஇஅதிமுக இனி வெற்றிபெற வேண்டும் என்றால் பிரிந்துசென்றவர்கள், விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்.
ஒற்றைத் தலைமை என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது
இ.பி.எஸ் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டார்.
முன்னாள் அமைச்சர். சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக