பகலில் பூட்டு – இரவில் கொள்ளை!” மங்களூர் நெல் கொள்முதல் மையம் சர்ச்சை!!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே மங்களூரில் நெல் கொள்முதல் மையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு
வேப்பூர் அருகே மங்களூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், பகல் நேரங்களில் பணிகள் நடைபெறாமல் இரவு நேரங்களில் மட்டுமே செயல்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு? விவசாயிகள் அதிர்ச்சி!
இரவு நேரங்களில் நெல் மூட்டைகள் எடைபோடும் போது, எடையில் குறைபாடு ஏற்படுவதாகவும், விவசாயிகள் நஷ்டமடைவதாகவும் புகார்.
ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் ரூ.50 கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசு அறிவித்த நேரமான காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகள் நடைபெறவில்லை; மாறாக இரவு நேரங்களில் மட்டும் செயல்படுவது கேள்விக்குறி.
விவசாயிகள் கேள்வி – “இந்த நடைமுறை யாரின் அனுமதி?”
நெல் கொள்முதல் மையத்தில் நடக்கும் இந்த செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமா அல்லது முறைகேடா என்று விவசாயிகள் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உடனடி விசாரணை நடைபெறுமா?
விவசாயிகளின் இழப்புக்கு தீர்வு கிடைக்குமா?
மங்களூர் விவசாயிகள் பதில் காத்திருக்கின்றனர்!
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக