இலுப்பூர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை!!
புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் மேட்டுச்சாலையில் உள்ள மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்தது. மாணவி எம். அஸ்மிதா ஸ்ரீ 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் அ. ஷேக் அப்துல்லா வாசிம் 477 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பா.ஹரிணி 473 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை புரிந்தார்கள்.
சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் முனைவர் இரா. சின்னதம்பி அவர்கள் தாளாளர் இரா.சி உதயகுமார் ஆகியோர் பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் திருமா. பூங்குன்றன், பதிவாளர் மு. தினேஷ்குமார், பள்ளி முதல்வர் ராஜகயல்விழி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி மற்றும் சிறப்பான மதிப்பெண்கள் எடுக்க உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி முதல்வரையும் நிர்வாகம் பாராட்டியது.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக