நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

சென்னையில் இன்று நடைபெற இருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா திடீர் ரத்து. முதல்நாள் கையெழுத்திட்ட திட்டத்தின் தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்

தமிழ்நாட்டில் சிறுவன் முதல் மூதாட்டி வரை பாலியல் தொல்லைக்கு ஆளாகும் கொடுமை. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுவதுதான் முதல் கடமை என சி.வி.சண்முகம் பேட்டி. வரும் 1-ம் தேதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்

டெல்லியில் ராகுல், சோனியாவைச் சந்திக்காமல் சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய். காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவும் மறுப்பு

கர்நாடக முதலமைச்சராக நாளை தேர்வு செய்யப்படுகிறார் டி.கே.சிவக்குமார். சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை பதவியேற்பு விழாவை நடத்த திட்டம்

கன்னியாகுமரி, நாகர்கோவில், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை. குளச்சலில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு.

மதுரை அலங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்கம் கொள்ளை. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும் திருடிச் சென்ற கும்பலை தேடும் காவல்துறை

போர் நிறுத்தத்தை மீறி அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தளம் மீது சரமாரி ஏவுகணை வீச்சு

 பெங்களூவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார். குஜராத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!