சிறிது காலம் அரசியலில் இருந்து ஓய்வு!முன்னாள் திமுக அமைச்சர். பழனிவேல் தியாகராஜன்!!
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இடைவிடாமல் பணியாற்றினேன். நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், அரசியலில் இருந்து சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எழுதிவரும் புத்தகப் பணிகளை இந்த ஓய்வு காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளேன்.
60 வயதை கடந்த நிலையில் உடல்நலன் மற்றும் வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். பொதுச் சேவையில் எனது ஆர்வம் குறையவில்லை; புத்துணர்ச்சியுடன் மீண்டும் வருவேன்.
முன்னாள் திமுக அமைச்சர். பழனிவேல் தியாகராஜன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக