சோளிங்கரில் அதிமுக மாவட்ட செயலாளர் பேரணி!அனைத்து நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்!!
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அதிமுக விற்கு புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அம்மனூர் ஏபிஎஸ். லோகநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் இவர் கட்சி நிர்வாகிகள் பலரை தினந்தோறும் சந்தித்து வருகிறார் இந்த நிலையில் நேற்று சோளிங்கர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியிலும் பங்கு கொண்டார் இதற்காக அங்குள்ள பெருமாள் ஆலயத்தில் இருந்து பேருந்து நிலையம் வரையில் பேரணியாக ஆயிரகணக்கான கட்சியினருடன் வந்து அடைந்தார் பின்னர் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார்
இந்த பேரனியில் மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் கார்த்திகேயன்
ஒன்றிய செயலாளர் ஏ எல் விஜயன் அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பழனி நெமிலி ஒன்றிய செயலாளர்கள் விஜயன் அருணாபதி காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா அரக்கோணம் நகர செயலாளர் பாண்டுரங்கன் மாவட்ட கலை பிரிவு செயலாளர் ஏ வி ரங்கநாதன் ஆகியோருடன் அரக்கோணம் எம்ஜிஆர் இளைஞர் அணி ராம்குமார் வர்த்தக அணி எம்பி சோமசுந்தரம் வட்ட செயலாளர்கள் தேவராஜ் டி கே பி செல்வம் நவாப் உள்ளிட்ட திரளானவர்களும் கலந்து கொண்டனர் போதிய பாதுகாப்பு செய்யப்படாத சூழ்நிலையால் அதிமுகவினரின் பேரணி சோளிங்கர் நகரை சம்பிக்க வைத்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக