"ஔவை தமிழ்மன்றம்” மற்றும் "கலாம் கல்வி அறக்கட்டளை" சார்பில் நடைபெற்ற திருக் குறள் போட்டி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் “ஔவை தமிழ்மன்றம்” மற்றும் டாக்டர் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ரஞ்சித் சந்தியா சஞ்சய் ஆகிய  மூவரில் இருவர்  திருக்குறளை ஒப்பிவித்தனர் ஒருவர் எழுத்து வடிவில் திருவள்ளூர் படம் வடிவமைத்தார் ஆகவே மாணவர்களின் திறமை பாராட்டி,  சான்றிதழ்களும் பரிசுகளையும் கலை அறிவியல் டீன் டாக்டர். எம். வெங்கட்டராமன் வழங்கினார். இந்தப் போட்டியில்  கலந்து கொள்ள மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, அவர்களின் திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்த வழிகாட்டிய ஐ க்யு ஏ சி. கெஜலட்சுமி முன்னிலை வகித்தார். செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் சமூக மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் பங்கேற்று, தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் அறிவை வளர்த்துக்கொள்ள ஊக்குவிப்பதில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியினை டாக்டர். அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை தலைவர் டாக்டர். சுகந்தி விநோதினி ஒருங்கிணைத்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!