தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர். கு. பாலமுருகன் அவர்கள் தவெக தலைவர். விஜய்க்கு வாழ்த்து!!

தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்க இருக்கும்  C. ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவர்களோடு பதவி ஏற்க இருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்டம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக மக்களின் சார்பாக கண்ணியமான வாழ்வு மற்றும் சமூக பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ் அரசு அலுவலர்களுக்கு தனியாக நலவாரியம், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது , தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம், பதவி உயர்வு பணியிட மாறுதல் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை, எட்டாவது ஊதிய குழுவை காலதாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றுவது போன்ற  பொது கோரிக்கைகளும், காவல்துறை நண்பர்களுக்கு தனி கோரிக்கைகளும் , அங்கன்வாடி பணியாளர்கள் பணியாளர்களுக்கு டி-கிரேடு ஊதியம், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு  ஓய்வூதியம், ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக சம வேலைக்கு சம ஊதியம், கற்றல் கற்பித்தல் அல்லாத பணிகளில் பணிபுரிவதில் இருந்து விலக்களித்தல் ,  நுண்ணறிவு பயிற்சி,  வெளிநாட்டு பயிற்சி,காலி பணியிடங்களை நிரப்புதல் , தூய்மை பணியாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகள், காவல்துறை நண்பர்களுக்கு எண்ணற்ற சலுகைகள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமைகள், ரேஷன் கடையில் காலியாக உள்ள எடை போடும் பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்புதல் , கூடுதல் ரேஷன் நேரடி விநியோகம், கூடுதல் ரேஷன் கடைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்துதல் அது மட்டுமல்லாமல்  மக்கள் நலத் திட்டங்கள் மாநிலத்தின் முன்னேற்றம் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2500, ஒரு வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பஸ் பயண வசதி, வேலு நாச்சியார் படை, இலவச கல்வி, அஞ்சலை அம்மாள் நீதிமன்றங்கள், மகளிர் முன்னேற்றம் மாநிலத்தின் முன்னேற்றம் என்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அதன்படி மக்களிடம் நன்னம்பிக்கையை பெற்று தமிழ்நாட்டில்  பெருவாரியான தொகுதிகளை பெற்று தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு  தகுதி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திருமிகு சி ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் சார்பாக நன்றியை தெரிவிப்பதுடன், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மாண்புமிகு  இளைய தளபதி சி ஜோசப் விஜய்  அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி மலர்ந்திட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஒன்றியத்தின் விருதுநகர் மாவட்டம்,  இணைப்புச் சங்கங்கள், அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.* 

 வாழ்த்துக்களுடன்!.…

கு. பாலமுருகன் மாவட்ட  தலைவர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் விருதுநகர் மாவட்டம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!