தேசிய மாணவர் படை ஒருங்கிணைந்த ஆண்டு பேச்சு முகாம்! தொடக்க விழா!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு ஆறாவது படைப்பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது . இம்முகாவின் தொடக்க விழா தமிழ்நாடு ஆறாவது படைப்பிரிவு கட்டளை அதிகாரி கர்னல்.சக்கரபர்த்தி அவர்கள் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாமின்நோக்கங்களையும்,பணிகளையும் எடுத்துக் கூறி தேசிய மாணவர் படை மாணவர்களை ஊக்கப்படுத்தினார் . இப்பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கட்டளை அதிகாரி கர்னல் ஆசிஸ் திவாரி அவர்கள் ஆய்வு செய்தார்.இப்பயிற்சி முகாமில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு,தேசிய மாணவர் படையின் நோக்கம், துப்பாக்கி சுடுதல் பயிற்சி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, தீ பாதுகாப்பு, முதலுதவி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, புவி வெப்பமயமாதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட தலைப்புகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முகாமில் லெப்டினன்ட் கர்னல் டி. எஸ்.நாராயன் , சுபேதார் மேஜர் சுரேஷ் உள்ளிட்ட ஆறாவது படைப்பிரிவின் ராணுவ வீரர்களும் பல்வேறு பள்ளி கல்லூரியைசார்ந்த தேசிய மாணவர் படை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.இம்முகாமில் 500மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக