நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🗞️ இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல்.
🗞️ செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக கனமழை. பழனி, பெரியகுளம், கூடலூர், பந்தலூரில் இடி, மின்னலுடன் மழை கொட்டியதால் மிரண்ட கால்நடைகள்.
🗞️ அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் தீவிரம். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால், எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டம்.
🗞️ திமுக-அதிமுக கூட்டணிக்கு, தான் முயன்றதாக பரவும் தகவலுக்கு நடிகர் ரஜினி மறுப்பு. 40 ஆண்டுகால நண்பர் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதாக விளக்கம்.
🗞️ தவெக தலைவர் விஜய் முதலமைச்சரானது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி என ரஜினி நெகிழ்ச்சி. எதிர்பார்ப்புகளை விஜய் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் உறுதி.
🗞️ திமுக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அமைச்சர் கீர்த்தனா. மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்த புரிதல் இல்லாமல் பேசுவதாக தங்கம் தென்னரசு கண்டனம்.
🗞️ தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை. உடலைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை.
🗞️ தவெக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு. கடலூர் தவெக எம்.எல்.ஏ., அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை
🗞️ இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற புதுச்சேரி முதலமைசர் ரங்கசாமி. முருகன் கோயிலில் வைத்து ஒரு தொகுதிக்கான ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியதால் சர்ச்சை.
🗞️ பொறியியல் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர்கள் தகவல். கம்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்.
🗞️ நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் ஆனைமங்கலம் செப்பேடுகள். தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியத்தில் வைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை.
🗞️ சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்ட இடத்தில் தனியார் சொகுசு பார். பேருந்து நிலையம், கோயில் உள்ள இடத்தில் தனியார் பார் திறக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி.
🗞️ காஞ்சிபுரம் எலைட் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலை வைத்து விற்பதாகக் கூறி வாக்குவாதம். புதுக்கோட்டை டாஸ்மாக் கடையில் கூடுதல் விலை கேட்டதாகக் கூறி மதுப்பிரியர்கள் போராட்டம்.
🗞️ தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம். பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு.
🗞️ உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128-ஆவது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்.10 லட்சம் மலர்களைக் கொண்டு 26 சிற்பங்கள் அமைப்பு.
🗞️ மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலை பக்கவாட்டுச் சுவரில் கார் மோதி பயங்கர விபத்து. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
🗞️ முசிறி அருகே புளியஞ்சோலையில் குவியும் சுற்றுலாப் பயணிகள். கொல்லிமலை அடிவாரத்தில் ஓடும் குளுகுளு தண்ணீரில் குளித்து உற்சாகம்.
🗞️ வேதாரண்யத்தில் 7 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட எள், சணல் பயிர்கள் கோடை மழையால் பாதிப்பு. அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
🗞️ ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கவுரவிப்பு. ஐரோப்பிய ஒன்றிய தலைவருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.
🗞️ கேரள முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் வி.டி.சதீசன். காங்கிரசின் 12 பேர், முஸ்லிம் லீக்கின் 5 பேர் உள்ளிட்ட 20 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
🗞️ நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை டெல்லியில் கைது. பேராசிரியைக்கு 15 நாள் சிபிஐ காவல் விதித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணை.
🗞️ ராஜஸ்தானில் நீட் முறைகேட்டில் கைதானவரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தேர்ச்சி. கடந்த ஆண்டும் முன்கூட்டியே நீட் வினாத்தாள் கசிந்ததா என தீவிர விசாரணை.
🗞️ 20 ஆயிரம் டன் எல்.பி.ஜி. எரிவாயு உடன் ஹோர்முஸைக் கடந்த கப்பல். நெருக்கடிக்கு மத்தியில் பயணித்து குஜராத் துறைமுகத்தை வந்தடைந்தது.
🗞️ ரஷ்யாவின் மீது இதுவரை இல்லாத வகையில் உக்ரைன் டிரோன் தாக்குதல். 600 டிரோன்களை அடுத்தடுத்து ஏவி தாக்கிய பயங்கரம்.
🗞️ சீனாவின் குவாங்ஸி மாகாணத்தை மூழ்கடித்த கனமழை, பெருவெள்ளம். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக