நெமிலி அருகே கடம்பநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே கடம்பநல்லூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் திருக்கோயில் நிர்வாகிகளான சீ.அசோக்குமார், மணி, சம்பத் ஆகியோரின் முன்னிலையில், நெமிலி ஒன்றிய கவுன்சிலர். அ.வரலட்சுமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு மற்றும் சயனபுரம் ஊராட்சிமன்றத் தலைவர். பவனி வடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர்.

மஹா கும்பாபிஷேக விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறைவனின் அருளைப் பெற்றனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றதுடன், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீ கற்பக விநாயகரின் அருளால் கிராம மக்கள் அனைவரும் வளமும் நலனும் பெற்று வாழ வேண்டுமென பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இவ்விழாவில் கடம்பநல்லூர், திருமாதலம்பாக்கம், மாங்காட்டுச்சேரி, முருங்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!