கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது!!

கோவை மாவட்டம்,கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் நிர்மல் குமார், 32 வயதான இவர், கோவை ராம் நகரை சேர்ந்த ரேகா என்ற  21வயது பெண்ணை, கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் பெண் வீட்டில், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டு உறுப்பினர்கள் பலர் முன்னிலையில், இந்து முறைப்படி, தாலி கட்டி, தனது மனைவியாக ஏற்று கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில், 

வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, கவுண்டம்பாளையம் லட்சுமி, பாலகிருஷ்ணன், கணுவாய் ராதாகிருஷ்ணன், 

கருப்பசாமி, யோகராஜ், நித்யானந்தன், பார்த்திபன், சந்தோஷ் பாலாஜி, சோனியா, ரங்கநாதன், வைத்தியர் பாலகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக ஐஎன்டியுசி அமைப்பை சார்ந்த, ராஜேஷ், ஸ்ரீ முருகன், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!