நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🔹 ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு மீண்டும் காவிச்சாயம் பூசப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு.. இந்த விவகாரத்திலும் முதலமைச்சர் விஜய் பயந்து நடுங்கக் கூடாது என உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
🔹 சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள், 3 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம். ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த கிர்லோஸ்குமாரும் இடமாற்றம்.
🔹 திமுகவின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி. GenZ தலைமுறையினர் சந்திப்பு கூட்டத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி.
🔹 நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி. தாயை இழந்த அஜித்குமாருக்கு கட்டியணைத்து ஆறுதல் கூறிய முதலமைச்சர்.
🔹 அபிஷேக் பானர்ஜி மீது பாஜக திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு. சிகிச்சை அளிக்கக் கூடாது என மருத்துவமனைகளுக்கும் அழுத்தம் கொடுத்ததாக மம்தா பரபரப்பு புகார்.
🔹 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மீது பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல். கற்கள், முட்டைகளை வீசி கடுமையாக தாக்கியதால் பலத்த காயம்.
🔹 தேர்தல் வெற்றிக்கு பிறகு சொந்த மாவட்டம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு. தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கியே வெற்றி பெற்றதாக அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்.
🔹 அடுத்தடுத்து தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள். விரைவில் முடிவெடுங்கள் எனவும் புதுக்கோட்டையில் போஸ்டர் ஓட்டி ஆதரவாளர்கள் நெருக்கடி
🔹 விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக அமைச்சர்கள் மாறுபட்ட தகவல். விரைவில் குளறுபடிகளை களைந்து புதிய அறிவிப்பு வெளியாகும் என வேளாண் அமைச்சர் தகவல்.
🔹 அடுத்த 4 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.
🔹 காதல் திருமணத்துக்கு உதவியதாக இளைஞர் மீது பெண் வீட்டார் தாக்குதல். பாதுகாப்பு வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்.
🔹 சென்னையில் டெலிவரி ஊழியரை கடுமையாக தாக்கிய ஓட்டல் மேலாளர். போலீசார் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
🔹 உயர் மின் அழுத்தம் காரணமாக அந்தியூரில் மின்சாதன பொருட்கள் எரிந்து சேதம். மீஞ்சூர் சுற்றுவட்டாரத்திலும் சீரற்ற மின்அழுத்தம் நிலவுவதாக மக்கள் வேதனை.
🔹 பொன்னேரி அருகே சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
🔹 உதகை அருகே மாயார் சாலையில் இரண்டு குட்டிகளுடன் சாலையை கடந்த தாய் புலி. குட்டிப்புலிகளை ஆர்வத்துடன் பார்த்து ரசித்த வாகன ஓட்டிகள்.
🔹 கர்நாடக முதலமைச்சராக ஜூன் 3-ஆம் தேதி பதவியேற்கிறார் டி.கே.சிவக்குமார். சித்தராமையாவுடன் இணைந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
🔹 கியூட் தேர்வு குளறுபடிக்கு வருத்தம் தெரிவித்தது தேசிய தேர்வு முகமை. தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட 3,765 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.
🔹 டெல்லியில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி 9 பேர் கைது. டெல்லி, மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தகவல்.
🔹 ஐ.பி.எல். தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?. இரண்டாவது முறை கோப்பையை வெல்ல பெங்களூரு - குஜராத் அணிகள் இடையே கடும் போட்டி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக