"அரசு போக்குவரத்து கழகங்கள் மரணப் படுக்கையில்" – நஷ்ட கணக்கு அறிக்கை!!
தமிழ்நாடு போக்குவரத்து கழக பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சென்னை | 06.05.2026
"அரசு போக்குவரத்து கழகங்கள் மரணப் படுக்கையில்" – நஷ்ட கணக்கு அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை குறித்து, தமிழ்நாடு போக்குவரத்து கழக பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்படும் விரிவான அறிக்கை:
1. நஷ்ட கணக்கு: 2021 மே vs 2026 மே.
விவரம் 2021 மே
ஆட்சி தொடக்கம் 2026 மே
தற்போதைய நிலை 5 ஆண்டில் அதிகரிப்பு
8 போக்குவரத்து கழகங்களின் மொத்த கடன் ₹38,500 கோடி ₹52,800 கோடி +₹14,300 கோடி
மாதாந்திர இயக்க நஷ்டம் ₹220 கோடி ₹610 கோடி +177%
வருடாந்திர இயக்க நஷ்டம் ₹2,640 கோடி ₹7,320 கோடி +₹4,680 கோடி
FC இல்லாத பேருந்துகள் 2,100 5,480 +3,380 பேருந்துகள்
ஊழியர் நிலுவைத் தொகை ₹4,200 கோடி ₹9,800 கோடி +₹5,600 கோடி
குறிப்பு: மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தொழிற்சங்கங்கள், CAG அறிக்கைகள் மற்றும் RTI மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.
2. நஷ்டத்திற்கான முக்கிய காரணங்கள்:
1. விடியல் பயணம் – பிங்க் பஸ் திட்டம்: சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். 7,712 பேருந்துகள் பாதிப்பு.
2. டீசல் விலை உயர்வு: 2021-ல் ₹84/லி இருந்த டீசல் 2026-ல் ₹103/லி. ஆண்டுக்கு ₹1,900 கோடி கூடுதல் சுமை.
3. ஊழியர் சம்பளம் & DA: 3 முறை DA உயர்வு, ஒப்பந்த ஊழியர் சம்பள உயர்வு – ஆண்டுக்கு ₹1,200 கோடி கூடுதல் செலவு.
4. புதிய பேருந்து வாங்காதது: கடந்த 5 ஆண்டில் வெறும் 1,800 புதிய பேருந்துகள் மட்டுமே. 40% பேருந்துகள் 10 வருடம் தாண்டியவை.
5. வருவாய் இல்லா வழித்தடம்: அரசியல் காரணங்களுக்காக நஷ்டத்தில் 1,200 வழித்தடங்கள் இயக்கம்.
3. "பிங்க் பஸ்" திட்டத்தால் 5 ஆண்டில் ஏற்பட்ட நஷ்டம்: 2021 – 2026
விடியல் பயணம் திட்டம் 07.05.2021-ல் தொடங்கப்பட்டது.
ஆண்டு மாத நஷ்டம் வருட நஷ்டம் 5 ஆண்டு மொத்தம்:
2021-22 ₹180 கோடி ₹2,160 கோடி
2022-23 ₹240 கோடி ₹2,880 கோடி
2023-24 ₹285 கோடி ₹3,420 கோடி
2024-25 ₹300 கோடி ₹3,600 கோடி
2025-26 ₹310 கோடி ₹3,720 கோடி ₹15,780 கோடி
5 ஆண்டில் பிங்க் பஸ் திட்டத்தால் மட்டும் நேரடி டிக்கெட் வருமான இழப்பு: ₹15,780 கோடி.
இது அரசு மானியமாக ஈடு செய்யப்பட்டாலும், மானியம் காலதாமதமாக வருவதால் கழகங்கள் வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் வட்டிச்சுமை ₹1,400 கோடி.
4. "அனைத்து பேருந்துகளிலும் இலவசம்" – விஜய் வெற்றிப்பயணம் அமலானால் எதிர்பார்க்கும் நஷ்டம்
அனைத்து அரசு பேருந்துகளிலும் – சாதாரணம், Express, Deluxe, AC, Bypass Rider – பெண்களுக்கு இலவசம் என அறிவித்தால்:
தற்போதைய நிலை:
- மொத்த அரசு பேருந்துகள்: 21,744
- இப்போது இலவசம்: 7,712 நகர பேருந்துகள் மட்டும்
- மாத நஷ்டம்: ₹310 கோடி
அனைத்து பேருந்துகளிலும் இலவசமானால்:
1. பாதிக்கப்படும் பேருந்துகள்: கூடுதலாக 14,032 பேருந்துகள். இதில் Express, Deluxe, AC வகைகளில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு அதிகம்.
2. எதிர்பார்க்கும் மாத நஷ்டம்: ₹680 கோடி முதல் ₹720 கோடி வரை.
3. எதிர்பார்க்கும் வருட நஷ்டம்: ₹8,160 கோடி முதல் ₹8,640 கோடி வரை.
4. 5 ஆண்டில் மொத்த நஷ்டம்: ₹40,800 கோடி முதல் ₹43,200 கோடி வரை.
கூடுதல் விளைவுகள்:
1. மொத்த கடன் 2029-ல் ₹95,000 கோடி தாண்டும். கழகங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படும்.
2. ஆண் பயணிகள் மீது சுமை: 70% பயணிகள் இலவசம் என்றால், மீதி 30% ஆண் பயணிகளின் டிக்கெட் கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தினாலும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது.
3. கிராம பேருந்து நிறுத்தம்: நஷ்டம் தாங்க முடியாமல் 3,000 கிராமப்புற வழித்தடங்கள் நிரந்தரமாக நிறுத்தப்படும் அபாயம்.
4. 1.2 லட்சம் ஊழியர்கள்: சம்பளம் நிறுத்தம், பென்ஷன் ரத்து, ஆட்குறைப்பு நடக்கும் சூழல் உருவாகும்.
5. எங்கள் கோரிக்கை:
1. இலவச திட்டத்தை விரிவுபடுத்த வேண்டாம். ஏற்கனவே TNSTC UTI ஆகிவிட்டது – Under Total Insolvency.
2. வருமான வரம்பு: மாதம் ₹25,000-க்கு மேல் சம்பளம் வாங்கும் பெண்களுக்கும், அண்டை மாநில பெண்களுக்கும் இலவசத்தை ரத்து செய்ய வேண்டும்.
3. நிலுவைத் தொகை: ₹9,800 கோடி ஊழியர் நிலுவையை உடனே வழங்க வேண்டும்.
4. வெள்ளை அறிக்கை: போக்குவரத்து கழகங்களை மீட்க 10 ஆண்டு திட்டம் வெளியிட வேண்டும்.
5. மானியம்: மாத நஷ்டத் தொகையை 1-ம் தேதியே முன்பணமாக வழங்க வேண்டும்.
"பெண்கள் முன்னேற்றம் முக்கியம். ஆனால் அதற்காக 1.2 லட்சம் குடும்பங்களை பலி கொடுக்க முடியாது. TNSTC வாழ்ந்தால் தான் நாளை அனைவருக்கும் பேருந்து ஓடும்."
இப்படிக்கு,
தமிழ்நாடு போக்குவரத்து கழக பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு
பொதுச்செயலாளர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக