அரிமளம் அருகே நெடுங்குடியில் நடைபெற்ற தேர்திருவிழா!!

அரிமளம் ஒன்றியம் நெடுங்குடியில் தென் கயிலாயம் என அழைக்கப்படும்  கைலாசநாதர்_ பெரியநாயகி அம்மன் திருக்கோயில் பெரிய குன்றின் மீது அமைந்துள்ளது. இங்கு வைகாசி விசாகத்திருவிழா21 ம்தேதி காப்புக்கட்டும் வைபவத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்,

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா ஆகியவை நடந்தன. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று கோலாகலமாக  நடந்தது.  

கைலாசநாதர் ஒரு தேரிலும் அம்மன் மற்றொரு தேரிலும் எழுத்தருளினர். பிறகு தேர்காலிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்பு  நெடுங்குடி,அதனைச்சுற்றியுள்ள கிராம முக்கியஸ்தர்கள்,புதுக்கோட்டை தேவஸ்தான பணியாளர்கள் சேர்ந்துவடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் கோயிலைச்சுற்றி 4 வீதிகளிலும் வந்து மாலை நிலைக்கு வந்த து. தலைமை சிவாச்சாரியார் கணேசன் தலைமையில் 11 சிவாச்சாரியார்கள்  அபிஷேக, ஆராதனைகளை செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!