புனே நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு!!
புனே நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையின் போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் சத்யாகி சாவர்க்கர் வழங்கிய வாக்குமூலம் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கு ஐந்து கடிதங்களை எழுதியதை ஒப்புக்கொண்ட சத்யாகி, சாவர்க்கர் பசுவை ஒரு கடவுளாகக் கருதவில்லை என்றும், மாறாக அதைப் பயன்பாட்டுக்குரிய ஒரு விலங்காகவே பார்த்தார் என்றும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது இந்திய இளைஞர்கள் அதிக அளவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர வேண்டும் என்று சாவர்க்கர் வேண்டுகோள் விடுத்ததையும் அவர் தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தியின் குறுக்கு விசாரணையின் போது அளிக்கப்பட்ட இந்தத் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக