நெமிலியில் நடைபெற்ற அறிவியல் இயக்கம் ஆளுமை திறன் பயிற்சி வகுப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைந்த இராணிபேட்டை , திருபத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட அறிவியல் இயக்க தொண்டர்களுக்கான ஆளுமை திறன் பயிற்சி வகுப்பு தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆளுமை திறன் பயிற்சி வகுப்பிற்கு மூன்று மாவட்டங்களின் தலைவர்கள். தாமோதரன், முத்து சிலுப்பன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாவட்ட தலைவருமான முனைவர். கலைநேசன் வரவேற்றுப் பேசினார். மாநில பொறுப்பாளர்கள் டாக்டர். எஸ். அனுரத்னா, ஜெயசுதா, அரவிந்தன் முன்னாள் மாவட்ட பொருளாளர். கனகசபை முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னாள் மாநில தலைவர் முனைவர். வெ. பா. ஆத்ரேயா கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மக்கள் அறிவியல் இயக்கங்களின் குறிக்கோள்கள் குறித்து தாமஸ் பிராங்கோ அறிவியல் பார்வையில் சமூக ஆய்வுகளும், படிப்பினைகளும் முனைவர் என்.மணி செயல்பாடுகளே தலைமையை உருவாக்கும் குறித்து முனைவர். பே.அமுதா எதனாலே?அறிவியல் இயக்க கூட்டமைப்பு செயல்பாடுகள், நிர்வாகிகளின் பணிப் பகிர்வுகள் குறித்து சுப்பிரமணி எதனாலே? அறிவியல் & கணித பயிற்சிகள் குறித்து பா.ராசேந்திரன், கே.கிருபானந்தம், உதயகுமார், கே. பழனிவேல் ஆகியோர் காணொளி வாயிலாக பேசினார்கள்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.
.

கருத்துகள்
கருத்துரையிடுக