அழகும் ஆரோக்கியமும் தரும் ஆத்தங்குடி டைல்ஸ்!!
சிவகங்கை மாவட்டம்,நம் வாழ்வில் நவீனத்தை நோக்கி ஓடி பின் ஆரோக்கியத்தை தேடி பின்னோக்கி பழங்கால முறையை திரும்ப தேடும் நிலை மாறி வருகிறது இன்றைய சூழலில் நாம் உண்ணும் உணவு மற்றும் நம்மை சுற்றி உள்ளவைகள் நம் ஆரோக்கியத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கிறது அந்த வகையில் நம் வீடுகளில் உபயோகிக்கும் மார்பில் டைல்ஸ் போன்றவைகள் நம் வீடுகளில் தரைகளில் உபயோகிக்கும் போது வெறும் காலில் நடந்து கால் வலி போன்ற நரம்பு பிரச்சனைகள் உருவாகி வீட்டிற்குள்ளேயே செருப்பு அணியும் பழக்கமும் ஏற்பட்டது இதுபோன்ற பிரச்சனை இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எல்லா வகையிலும் நன்மை தரும் ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் பாரம்பரிய முறையில் கைகளில் தயாரிக்கப்படும் இவ்வகை டைல்ஸ் மிக பளபளப்பாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது குறிப்பாக ஆத்தங்குடியில் மட்டுமே இவ்வகை டைல்ஸ்கள் தயாரிக்கப்படுகிறது இதற்கு காரணம் அங்குள்ள மண் மட்டுமே அவ்வகை டைம்ஸ்கள் தயாரிக்க ஏற்ற வகையில் அமைந்துள்ளது இவ்வகை டைல்ஸ் கலை இங்கு வர காரணம் நகரத்தார் எனப்படும் செட்டிநாட்டவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலுக்காக வெளிநாடுகள் சென்று அங்குள்ள டைல்ஸ்களை இங்கு வருவித்து செட்டிநாடு வகை வீடுகளை அரண்மனை போல் கட்டி தரைகளுக்கு உரிய டைல்ஸ் ஸ்பெயினில் இருந்தும் சுவர்களுக்கு உரிய டைம்ஸ் ஜப்பானிலிருந்தும் கொண்டு வந்து வீடுகள் கட்டினர் இங்கு இவ்வகை வீடுகள் மிகவும் பிரபல்யமானது இன்றும் அதே பொலிவுடன் தன் பொலிவு மாறாமல் பிரதிபலிப்பதால் மிகவும் பெயர் பெற்றதாகியது காரைக்குடி செட்டிநாடு வீடுகள் என்றாலே இவ்வகை டைல்ஸ்கள் என்று மிகவும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது அதன் தாக்கத்தால் ஆத்தங்குடியில் இவ்வகை டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு இன்றுவரை மிக வரவேற்பில் உள்ளது இவ்வகை டைம்ஸ்கள் அனுபவம் நிறைந்தவர்களால் மட்டுமே செய்யப்படுகிறது ஒரு சதுர அடியில் தயாரிக்கப்படும் டைன்ஸ்கள் செய்ய சிமெண்ட் மணல் கலர் ஆக்சைடுகள் கண்ணாடி பிளேட் பூச்சட்டம் இரும்பு பிரேம் போன்ற குறைவான பொருள்களை கொண்டு செய்யப்படுகிறது கண்ணாடி பிளேட்டில் பிரேமை அமைத்து பூ மாடல்களை அதன் மேல் வைத்து கலர் ஆப்சைடுகள் மஞ்சள் சிவப்பு பச்சை ஆக்சைடுகள் கலவை ஊற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு அதன் மேல் புழுதி மணல் தூவப்பட்டு அதன் மேல் ஈர சிமெண்ட் கலவை வைக்கப்பட்டு சமப்படுத்தப்பட்டு ஒரு நாள் காய வைக்கப்பட்டு பின் தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைக்கப்பட்டு பிரேம்கள் பிரிக்கப்பட்டு நான்கு நாட்கள் முதல் 12 நாட்கள் வரை நிழலில் உலர்த்தப்படுகிறது பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு. இவை டைல்ஸ் மீது நடக்கும்போது கால் வலி நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவும் வராது வெறும் தரையில் கூட படுக்கலாம் டைல்ஸ்களை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து அந்த நீரால் சுத்தம் செய்தால் போதும் இவ்வகை டைல்ஸ்கள் நடக்க நடக்க பளபளப்பு கூடும் 19 மில்லி மீட்டர் கணம் கொண்ட டைல்ஸ்கள் 2 கிலோ அளவில் இருக்கும் வீடுகளுக்கு உள்ளே மட்டுமே பயன்படுத்த முடியும் வழுக்கும் தன்மை என்பது கிடையாது எனவே உபயோகிக்க எளிதானது இவ்வகை டைம்ஸ்கள் ஒட்டும் பொழுது அதன் மேல் தவிடுகளை பரப்பி வைப்பர் தவிடுகளில் உள்ள எண்ணெய் சத்து அத்த டைல்ஸ்களின் பளபளப்பை மெருகூட்டும் வெயிலில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் கதகதப்பையும் தருவதால் கால சூழ்நிலைக்கு ஏற்ப இதன் தன்மை மாறுவதால் வீடு முழுவதுமே குளிர்ச்சியூட்டும் தன்மையை தருகிறது மற்ற டைல்ஸ்களோடு ஒப்பிடும் பொழுது பதிக்கும் செலவும் ஒரே அளவு தான் இருக்கிறது ஆனால் பயன்பாடு என்று பார்க்கும் பொழுது ஒரு வீட்டின் ஆயுட்காலத்தின் அளவுக்கு அதனுடைய உபயோகமும் இருக்கும் அதோடு ஆரோக்கியம் தருவதால் இந்த டைல்ஸ்களின் மவுசு மிக அதிகமாக உள்ளது காரைக்குடியின் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதில் இந்த டைல்ஸ்களின் பங்கும் பெருமளவில் உள்ளது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக