வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு!!


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர்  மீனா , டி என் பி எஸ் சி மூலம் தேர்ச்சி பெற்று ஊராட்சித் துறையில் பணிக்கு இணைந்தார் , இளநிலை உதவியாளர் உதவியாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என பதிவு உயர்வு பெற்றார் , இவர் குடியாத்தம் கே வி குப்பம் பேரணாம்பட்டு திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட ஒன்றியங்களில் பணிபுரிந்தவர் , தற்போது குடியாத்தம் ஒன்றியம் தணிக்கை பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார் , இவர் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார் , இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு பதவி உயர்வு ஆணையை நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார் ,மேலும் இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பதிவு உயர்வு பெற்றிருக்க வேண்டும் தேர்தல் நடைமுறையில் உள்ளதால் கால தாமதமாக பதிவு உயர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!