முதல்வர் விஜய்யிடம் விசால் கோரிக்கை!!
தமிழக முதல்வராக பதவி ஏற்ற விஜய்க்கு நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து, அதிக இடங்களில் வென்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சி தலைவர் நடிகர் விஜய், முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஷால் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! நமது திரையுலகைச் சேர்ந்த ஒரு ஆளுமை இந்த மாநிலத்தை வழி நடத்துவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும், எதிர்கால அமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள். இது நமது மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும்.அன்புள்ள முதல்வர் விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒருவரை, இப்போது 'சார்' என்று அழைத்து பெருமை கொள்கிறேன். ஒரு வாக்காளராக உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் இதோ:
பெண் காவலர்களின் நலன்: முதல்வர் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குச் செல்லும்போது, வெயிலில் நீண்ட நேரம் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குத் தேவையான நடமாடும் கழிப்பறை வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகிறேன்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக