ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை சார்பில்,..... மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி...
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை சார்பில், 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தொகை, கல்வி உபகரணங்கள்வழங்கும் நிகழ்ச்சி வாலாஜாப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முனைவர் கே.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டில் உயர்கல்வி,தொழில்நுட்பக் கல்வி மற்றம் வேலை வாய்ப்புகள் குறித்து சென்னையை சேர்ந்த கல்வி ஆலோசகர் ஐ.பாலாஜி பேசினார்.
இதையடுத்து புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு அறிவியலாளர் வேலூர் எம்.விஸ்வநாதன், சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் எம்.கே.குணா, கணபதி, ஆற்காடு ஜேசிஐ தலைவர் ஜி.பிரதீப்குமார்,போட்டித்தேர்வு மைய நிர்வாககிகள் விஜயகாந்த், கார்த்தி உள்ளிட்டோர் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு,10,12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை,200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் எல்.ராஜசேகரன், எம்.சேதுபதி, ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தலைவர் எம்.கந்தன், செயலாளர் பெ.பாபு, பொருளாளர் நா.லோகநாதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக