கிருஷ்ண பாண்டவர் ஆலயத்தில் திரௌபதி அம்மன் திருகல்யாணம்!!
ராணிப்பேட்டை அரக்கோணம் சுவால் பேட்டை அருள்மிகு தர்மராஜா கோவில் ஸ்ரீ கிருஷ்ண பாண் டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 24 தினங்களுக்கு நடைபெறும் அக்கினி வசந்த விழா விஷ்வகர்மா சமூகத்தினரால் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வெவ்வேரு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்று வருகிறது அந்த வகையில் அர்ச்சுன திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது திருமணத்தில் பெண் மற்றும்வீட்டார் மணமகன் வீட்டார் சார்பில் செட்டியார் சமூகத்தினர் பங்கேற்று நடத்தினர் திரளான பக்தர்கள் கல்யாணத்தில் கலந்து கொண்டனர் பின்னர் கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக