திருமயம் தொகுதியில் நன்றி பயணம் மேற்கொண்ட அமைச்சர் எஸ். ரகுபதி!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் தெற்கு ஒன்றிய பகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், மாண்புமிகு அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் ஊர் தோறும் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.
இந்த நன்றி பயணத்தின் போது, மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் ஆதரவுக்கு நன்றியையும், எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து உறுதியையும் அமைச்சர் தெரிவித்து வருகிறார். பொதுமக்களும் அவரை வரவேற்று வாழ்த்துகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக