மீண்டும் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!!


*ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு என்பது அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.*

*இதனால் அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை பறிகொடுத்து நிற்கிறது.*

*அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’  ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இது டிடிவி தினகரன் வசம் சென்றது.*

*அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஊடகமாக இருந்த   ‘ஜெயா டிவி’ சசிகலாவின் வசம் சென்றது.   அதிமுகவில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின்னர்*

*அதிமுகவுக்கு என்று அதிகாரப்பூர்வ ஊடகமாக உருவனாது ‘நியூஸ் ஜெ’.  அதே போன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உருவானது ‘நமது அம்மா*

*நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ இரண்டும் சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோரால் இயங்கி வந்தது.  தற்போது அதிமுகவில் மேலும் ஏற்பட்ட பிளவில் சண்முகம், வேலுமணி இருவரும் தனி அணி அமைத்திருப்பதால் அவர்கள் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.*

*இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள் இவற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளன*

*இதனால், அதிமுகவுக்கு என்று மீண்டும்  ஒரு அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகம் உருவாக்க தேவை ஏற்பட்டிருக்கிறது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!