நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
நாளை முதல் கத்திரி வெயில் ஆரம்பம்:
கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படும் கத்திரி வெயில் காலம் நாளை தொடங்குகிறது.
வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், பகல் நேர வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
⏩ பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம். வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு
⏩ தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மும்முரம். தேர்தல் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் துணை ஆணையர் ஆலோசனை.
⏩ வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு. முக்கிய இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிப்பு.
⏩ மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பால்டா தொகுதியில் தேர்தல் ரத்து. வாக்குப்பதிவு தினத்தில் விதிமீறல்கள் நடந்ததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை
⏩ கோவை, தேனி ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை. ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து சேதம் ஆனதால் விவசாயிகள் கவலை.
⏩ தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் அடித்த வெயில். அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெப்பம் பதிவு.
⏩ நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது நீட் நுழைவுத் தேர்வு. 552 நகரங்களில் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.
⏩ வணிக சிலிண்டர் விலை உயர்வால் உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு. டீ, காபி, வடை உள்ளிட்டவை விலையும் உயர்ந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
⏩ வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால் சிறு, குறு தொழில்துறை பாதிப்பு. நிறுவனங்களை மூடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் வேதனை.
⏩ மத்தியப் பிரதேச படகு விபத்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு. திருச்சியை சேர்ந்தவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டுவர கோரிக்கை.
⏩ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என திருமாவளவன் உறுதி. விசிக மூலம் திமுக கூட்டணியை பலவீனப்படுத்த முயற்சி நடந்ததாகவும் குற்றச்சாட்டு.
⏩ கொல்கத்தாவில் இன்று முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு. வாக்கு எண்ணிக்கை நாளன்று வன்முறை நடக்க வாய்ப்புள்ளதால் நடவடிக்கை
⏩ வாக்கு எண்ணிக்கையின்போது மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
⏩ டெல்லியில் 30 வயதான நீதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு. தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை.
⏩ திருப்பதி கலப்பட நெய் வழக்கில் ஒரு நபர் ஆணையம் அறிக்கை தாக்கல். முறைகேட்டுக்கு முன்னாள் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டியே காரணம் குற்றச்சாட்டு.
⏩ மெக்சிகோவில் அடுத்த வாரம் தொடங்கும் தெருவோர சிறார்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து. சென்னையில் இருந்து 9 வீராங்கனைகள் இந்திய அணிக்கு தேர்வு.
⏩ திருச்செங்கோட்டில் சிறுவனை காப்பாற்ற வேகமாக பறந்த ஆம்புலன்ஸ்கள். முன்னும் பின்னும் எஸ்கார்ட் ஆம்புலன்ஸ்களுடன் சென்று உயிரை காத்த ஓட்டுநர்கள்.
⏩ திருவண்ணாமலையில் சித்ரா பவுர்மணியில் தேங்கிய 300 டன் குப்பைகள். விரைவாக அகற்றிய தூண்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
⏩ சித்தூர்-தச்சூர் இடையே முதல் கட்டமாக 92 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுவழிச்சாலை பணிகள் நிறைவு. சோதனை இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் ஆந்திரா, பெங்களூரு செல்வோர் உற்சாகம்
⏩ நெல்லை பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் எலுமிச்சை விலை புதிய உச்சம். தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ 320 ரூபாய் வரை உயர்வு.
⏩ ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் லீக் செய்த விவகாரம். ஒன்பது பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
⏩ குன்னூர் ராணுவ பயிற்சி மையத்தில் களைகட்டிய கலைநிகழ்ச்சி. ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்று உற்சாக நடனம்.
⏩ இஸ்ரேலின் எல்லையோர பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புகளை தாக்கி இஸ்ரேல் பதிலடி.
⏩ பெண்கள் டி.20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான 15 வீராங்கனைகள் கொண்ட பட்டியல் வெளியீடு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக