வீரபாண்டி திருவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!
தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, முதல் நாள் திருவிழாவான நேற்று (12.05.2026) 24 மணிநேர ஆம்புலன்ஸ் வசதிகளுடன் கூடிய இலவச மருத்துவ முகாமில் மருத்துவர்கள் Dr. மோகன பிரகாஷ், Dr. ராகுல் ஆகியோர் கலந்துகொண்டு 194 பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனையின் செயலாளர் திரு. கமலக்கண்ணன் அவர்களின் தலைமையில் மருத்துவமனையின் மேலாளர் செல்வி. சாந்தி, கணக்காளர் திரு. முருகேசன், மக்கள் தொடர்பு மேலாளர் திரு. சேக் பரீத், மக்கள் தொடர்பு அலுவலர்கள் திரு.தீபன், திரு. அப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதனால் பெருவாரியான மக்கள் பயன் பெற்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக