நத்தத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் முறிந்து விழுந்த பட்டுப்போன மரம் !!
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் - மதுரை நெடுஞ்சாலையில் கோவில்பட்டி திருமணிமுத்தாறு பாலம் அருகில் அலங்கார கொன்றை (வாவரக்காச்சி ) மரம் ஒன்று காய்ந்து பட்டுப்போய நின்றது . இது சனிக்கிழமை மாலை திடீரென சாலையில் விழுந்தது. இதனால் பாலப்பகுதியில் போக்குவரத்தில் வாகனங்கள் செல்ல பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் (பொறுப்பு) அம்சராஜன் தலைமையில் வீரர்கள் குழுவினர் விரைந்து செயல்பட்டு சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த பணி சுமார் 30 நிமிடங்கள் நடந்து முடிந்ததை தொடர்ந்து போக்குவாதத்திற்கு சாலை முழுமையாக சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக